வியாழன், 20 மே, 2010

தான் ஓரு அப்பட்டமான பொய்யன் என்பதை பிஜே மீண்டும் நிருபித்து இருக்கிறார்.

நீங்கள் யார் என்ன சொன்னாலும் நான் பிஜெ இல்லை பொய்ஜெதான் என நீக்கமற நிரூபிக்கும் தனிநபர் தக்லீத் ஜமாஅத்தின் நிரந்தர தலைவர் மீண்டும் பொய் சொல்லி இருக்கிறார்.


நெல்லையில் நடந்த யாதவ மகா சபையின் மாநாட்டில் நடந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர் கலந்து கொண்டதாக பொய்யான செய்தியை பொய்யன்ஜெயின் கட்டுபாட்டில் இயங்கும் டிரஸ்டுக்குச் சொந்தமான வார இதழ் (14:35) வெளியிட்டிருந்தது. இதற்காக எஸ்.எம். பாக்கர் தனது வழக்கறிஞர் மூலம் டிரஸ்டு வார இதழுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

அதில், தவறான செய்தி வெளியிட்டதற்காக டிரஸ்டு இதழ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், அதனை 7 நாட்களுக்குள் அதே இதழில் பிரசுரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.


ஆனால் வக்கில் நோட்டீசில் இல்லாத வாசகத்தை பொய்யாகச் சேர்த்து வெளியிட்டுள்ளது (மே 14-20 தேதியிட்ட) டிரஸ்டு இதழ் அந்த வார இதழ் வெளியிட்டுள்ள (திரிக்கப்பட்ட) வாசகம் பின்வருமாறு:


"மேலும் தனது மறுப்பில் அவர் நான் சிலை திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. சிலையைத் திறந்த பின் அது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிலையைத் திறப்பது போல் பத்திரிகைகளுக்காக போஸ்தான் கொடுத்தேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நாம் வக்கீல் நோட்டீசில் குறிப்பிடப்பட்டு டிரஸ்ட் பத்திரிக்கைக்கு அனுப்பிய (உண்மையான) வாசகம் பின்வருமாறு:
"மேற்கண்ட சிலை திறப்பு நிகழ்ச்சி மாலை சுமார் 5.30 மணியளவில் நடைபெற்றது. ஆனால் எனது கட்சிக்காரர் மாலை சுமார் 6.30 மணிக்குத் தான் மாநாட்டு மேடைக்குச் சென்றார். அவ்வேளையில் அங்கு வந்த பத்திரிகையாளர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது எனது கட்சிக்காரர் உட்பட தலைவர்கள் அனைவரும் மீடியாவுக்கு போஸ் கொடுத்தனர்''.
உண்மை இவ்வாறிருக்க, வக்கீல் நோட்டீசில் குறிப்பிடப்படாத "சிலையைத் திறப்பது போல் பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்தேன்'' என்ற வாசகத்தை பொய்யாகச் சேர்த்து வெளியிட்டி ருக்கிறது அந்த வார இதழ். டிரஸ்டு வார இதழின் இந்த கீழ்த்தரமான செயலுக்காக வழக்குத் தொடுக்க பரிசீலனை செய்து வருகிறார் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர்.
பொய்யர்கள் மீது நாசத்தை ஏற்படுத்த அல்லாஹ்வே போதுமானவன்.

நன்றி - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்ஆன்லைன்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக