செவ்வாய், 25 மே, 2010

ஏக இறைவனின் திருப்பெயாரால்....

தியாகியே! தீவுத்திடல் நோக்கி திரண்டுவா! என்ற தலைப்பில் தமிழக தவ்ஹீதை குத்தகைக்கு எடுத்திருப்பது போல் கூக்குரலிடும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவர்களின் மாநாட்டிற்கான அழைப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.



அதில்... இடஒதுக்கீடு சாத்தியமல்ல! என்று விரகத்தியில் இருந்த சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு சாத்தியமே! என்ற நம்பிக்கை உணர்வை மட்டுமல்ல நம்பிக்கை ஒளியையும் ஊட்டி, அதற்க்கான வழியை காட்டியவர்கள் தவ்ஹீத் கொள்கையினர்தான் என்று அதில் கூறுகிறார்கள். அப்படி என்றால் இவர்களின் கூற்றுப்படியே இடஒதுக்கீட்டு குரலை முதன் முதலில் ஒழித்து அதற்கான போராட்டகளத்தை ஏற்ப்படுத்திய குணங்குடி ஹனீபா, பேரா.ஜவாஹிருல்லாஹ், பி.ஜைனுல் ஆபிதீன், செ.ஹைதர் அலி, எஸ்.எம்.பாக்கர், அலாவுதீன் போன்றோர் அடங்கிய தமுமுக என்பதையும் இவர்களெல்லாம் உண்மையில் தவ்ஹீத்வாதிகள்தான் என்பதை இவர்களே கூறுகிறார்கள். அல்லாஹ் சில நேரங்களில் சில நபர்கள் வாய்களில் தன்னை அறியாமலேயே உண்மையை உலர வைப்பான் எனபது இவர்களது மாநாட்டு அழைப்பில் தெளிவுபடுகிறது.
(அல்ஹமதுலில்லாஹ்


அதே அழைப்பில் இன்னொரு இடத்தில் சொல்கிறார்கள் 1995 ல் சென்னை கடற்கரையில் கூட்டிய மாநாட்டையும் 2004 ல் தஞ்சைப் பேரணி மாநாட்டையும் நடத்தியது தவ்ஹீத்வாதிகள்தான் என்று ஆணித்தரமாக கூறும் இவர்கள் யாரை தவ்ஹீத்வாதிகள் என்று சொல்கிறார்கள் என்பதை மக்களால் தெளிவாக விளங்கமுடியும். ஏனன்றால் அந்த இரண்டு மாநாடுகளையும் தமுமுக தான் நடத்தியது என்பதும் அந்த தமுமுக வில் தான் பேரா.ஜவாஹிருல்லாஹ், செ.ஹைதர் அலி, எஸ்.எம்.பாக்கர் எல்லாம் இருந்தார்கள் என்பதும் மக்கள் அறிந்த உண்மை. இவர்கள் வாயாலேயே தமுமுகவினரை தவ்ஹீத்வாதிகள் என்று வர்ணிக்கிறார்கள் என்றால் பிறகு எப்படி தமுமுகவிலிருந்து இவர்களாக விலகும்பொழுது தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு தமுமுக எதிராக இருக்கிறது என்ற வாதத்தை வைத்தார்கள். என்ற கேள்வி சமுதாய மக்களால் இன்று எழுப்பப்படுகிறது. இதன்மூலம் இவர்கள் வடிகட்டிய பொய்யர்கள் எனபது தெளிவாகிறது.



உண்மையான முஸ்லிம்கள் யாரும் ஜெயலலிதாவிற்கு வாக்களிக்க மாட்டான் என்று பிரச்சாரம் செய்த இந்த போலி தவ்ஹீத்வாதிகள் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அந்த பார்பன ஜெயலலிதாவிற்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு தமிழகம் முழுவதும் அம்மா இடஒதுக்கீட்டுக்கு ஆணை பிறப்பித்துவிட்டார். ஆகவே அம்மாவிற்குதான் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் நடிகைகளோடு (நம் சகோதர்களோடு ஒரே மேடையில் ஏறாதவர்) பிரச்சாரகளம் கண்டார்கள். ஆனால் சமுதாய இயக்கமான தமுமுக சரியான பாதையை தேர்ந்தெடுத்து நரேந்திர மோடியை தமிழகத்திற்கு அழைத்து தனது இல்லத்தில் விருந்து வழங்கிய ஜெயலலிதாவை எதிர்த்து மாறாக இரண்டே கோரிக்கைக்காக தி.மு.க வை ஆதரித்து தமிழக முழுவதும் பிரச்சாரம் மேர்க்கொண்டு திமுக விற்கு வெற்றி வாய்ப்பை ஏற்ப்படுத்திகொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களோடு இருந்து சாதுரியமாகவும், வீரியமாகவும் இடஒதுக்கீட்டுக்கான குரல் எழுப்பி வந்ததோடு மட்டுமல்லாமல் திமுகவிற்கு எதிராக போராட்டத்தையும் அறிவித்தது. அதன் நெருக்கடி காரணமாக இனி முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது என்பதை விளங்கிய கருணாநிதி இடஒதுக்கீட்டை சட்டமன்றத்தில் அமுல்ப்படுத்திய வரலாற்றை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைத்துகொண்டு இந்த போலி தவ்ஹீத் கூட்டம் எங்களால்தான் இடஒதுக்கீடு கிடைத்தது என்ற பொய்யை திரும்ப திரும்ப கூறிவருகிறார்கள்.



குஜராத்தில் உன் சமுதாயத்தை சார்ந்தவர்கள் 3000 பேர் கொளுத்தப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் ஒரு முனுமுனுப்பு கூட இல்லாமல் பிசு பிசுத்து போனது ஏன்? என்று இன்று கேட்கும் இவர்கள் அந்த கலவரத்திற்கு காரணமான நரேந்திர மோடி மீண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பொழுது அழைப்பே இல்லாமல் நேரடியாக சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து விட்டு வந்ததோடு மட்டுமில்லாமல் தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வழங்கிய ஜெயலலிதாவை இவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆதரித்தது ஏன்? அதன்மூலம் இவர்கள் அடைந்த ஆதாயம் என்ன? என்ற கேள்வியை சமுதாய மக்கள் எழுப்புகிறார்கள். அதற்கு இந்த போலி தவ்ஹீத்வாதிகள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? எந்த மாயாஜால வார்த்தையை கூறி சமுதாயத்தை நம்பவைக்கும் நாடகத்தை அரங்கேற்ற போகிறார்கள்?



வெளிநாட்டில் குறிப்பாக அரபு நாட்டில் ஆடு மேய்ப்பது, பாலைவன வெயிலில் சாலை போடுவது, அரபி வீட்டில் அடுப்படி நெருப்பில் சமைப்பது, அவன் வீட்டு குழந்தைகளுக்கு மலம் கழுவுவதுதான் காலமெல்லாம் உன் கதியானது . இதுவே உன் வாழ்கை விதியானது. நீ அரபு நாட்டு அடிமை. இந்த அவல நிலையை போக்கவேண்டுமென்றால் மத்தியில் நமக்கு 10% இடஒதுக்கீடு வேண்டும் என்று சொல்லும் இவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி தமுமுக சமுதாய மக்களோடு டெல்லி சென்று ஆட்சியின் அதிகார பீடமான நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மாநாட்டையும் நடத்தி அதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் பங்கு பெறவைத்து அதன் இறுதியில் பிரதமரை சந்தித்து 10% இடஒதுக்கீட்டை வலியுறுத்தி ஒரு மனுவையும் கொடுத்துவிட்டு வந்த அந்த தமுமுக வின் போராட்டத்தை இந்த போலி தவ்ஹீத்வாதிகள் விமர்சித்தது ஏன்? இந்த அரபு நாட்டு அவலங்கள் அன்று இவர்களுக்கு தெரியாமல் போனது ஏன்? அல்லது அன்று இவர்களின் கண்ணை மறைத்தது எது? என்று சமுதாய மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த போலி தவ்ஹீத்வாதிகளின் பதில் என்ன?



ஜெயலலிதா கடந்த 5 வருட ஆட்சியில் இருந்தபொழுது தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை மறந்து விட்டு இடஒதுக்கீடு வழங்காமல் முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி வந்ததோடு ஆந்தராவில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியதை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட அந்த ஜெயலலிதாதான் மீண்டும் இந்த சமுதாயத்தை ஏமாற்றுவதற்காக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஆணையம் அமைப்பதற்காக அல்லது அமைத்ததாக நாடகமாடியதை எந்த மடையனாவது நம்புவான? ஆனால் இந்த மாங்கா மடையர்கள் நம்பி முஸ்லிம் சமுதாயத்தின் துரோகி ஜெயலலிதாவை ஆதரித்தது ஏன்?



கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபின் பல்வேறு நெருக்கடிக்குப்பிறகு இடஒதுக்கீடு வழங்கியது. அந்த திமுக அரசையே விமர்சித்து இவர்கள் (திமுக) நம் சமுதாயத்தை ஏமாற்றி விட்டார்கள் என்று சமுதாய மக்கள் மத்தியில் கூறி வந்த இவர்கள் திமுக கூட்டணியில் இருந்த தமுமுக வெளியேற்றப்பட்டவுடன் தானாகவே வழிய சென்று கருணாநிதியை சந்தித்துவிட்டு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வை ஆதரித்தது ஏன்? இவர்களின் அரசியல் லாபம் என்ன? என்று சமுதாய மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? இந்த போலி தவ்ஹீத்வாதிகளின் பதில் என்ன?


நாம் இவர்களை பார்த்து கேட்பது....?

1) 1995 ல் தமுமுக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் பங்குபெற்ற ஜெயலலிதாவோடு மேடை ஏறமாட்டேன் என்று சொன்ன பி ஜே பிறகு 2006 ல் அதே ஜெயலலிதாவை ஒரு ரூமில் சந்தித்தது ஏன்?



2) எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் ஜெயலலிதாவிற்கு வாக்களிக்க மாட்டான் என்று சொல்லிய பிஜே கடந்த சட்டமன்ற தேர்தலில் (நரேந்திர மோடியின் தோழி) ஜெயலலிதாவிற்குதான் முஸ்லிம்கள் வாக்களிக்கவேண்டும் என்று கூறியது ஏன்?



3) கோவையில் 19 முஸ்லிம்களை கொன்ற கருணாநிதிக்கா உங்கள் ஓட்டு என்று சொல்லிய பி.ஜே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கருணாநிதிக்குதான் நாம் வாக்களிக்கவேண்டும் என்று சொல்லி பிரச்சாரம் செய்தது ஏன்?



4) 1995 லிருந்து 2004 வரை தமுமுகவினரை நம்பி இந்த சமுதாயம் எவ்வளவு பொருளாதாரம் வேண்டுமானாலும் கொடுக்கலாம் காரணம் இவர்கள் முழுக்க முழுக்க அல்லாஹ்வை அஞ்சிய தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிவிட்டு 2004 க்கு பிறகு இவர்கள் தவ்ஹீதுக்கு எதிரானவர்கள் என்று பிரச்சாரம் செயது தமுமுகவை முடக்க நினைத்துவிட்டு இன்று வாழ்வுரிமை மாநாட்டையும், தஞ்சை பேரணி மாநாட்டையும் நடத்தியது தவ்ஹீதுவாதிகள்தான் என்று அதே தமுமுகவினரை கூறுவது ஏன்?



5) அந்த மாநாடுகளை நடத்தியது தவ்ஹீத்வாதிகள்தான் என்றால் அந்த இரண்டு மாநாட்டையும் நடத்தியது இன்று உள்ளவர்களையும் உள்ளடக்கிய தமுமுகவினர்தானே?



6) தமுமுகவிலிருந்து பிரியும் பொழுது தமுமுக அரசியலுக்கு போகிறது என்று சொல்லிவிட்டு தனி இயக்கம் கண்ட இவர்கள் பிறகு தங்களது இயக்கத்தை வழிநடத்துவதற்காக அரசியல் செய்தது ஏன்? சட்டமன்ற தேர்தல் வரும் நேரத்தில் மாநாட்டை நடத்தி அரசியல்வாதிகளுக்கு மத்தியில் நாங்களும் இயக்கம் நடத்துகிறோம் என்பதை காட்டுவது ஏன்? சமுதாயத்தின் கோரிக்கையை முன்வைத்துதான் மாநாடு நடத்துகிறோம் என்றால் அதே கோரிக்கையை சகோதர இயக்கங்கள் வலியுறுத்தும்போது அவர்களை உதாசினப்படுத்தி, கேவலப்படுத்தி விமர்சிப்பது ஏன்? (இப்பொழுது இவர்கள் கேட்கலாம் நங்கள் நடத்தும்போது ஏன் விமர்சிக்கிறீர்கள் என்று, நாம் இவர்களை தவறாக விமர்சிக்கவில்லை, இவர்கள் மீது இட்டுக்கட்டவும் இல்லை மாறாக இவர்கள் கடந்த காலங்களில் செய்தவற்றயே கேள்வியாக கேட்க்கிறோம் சரியான பதில் கொடுத்தல் சமுதாயம் விளங்கிக்கொள்ளும்)



7) இன்று சகோ.பாக்கரின் குறைகளை (அவர் குற்றம் செய்தாரா என்பதை அல்லாஹ்வே நன்கு அறிவான்) தீவிரமாக எதிர்க்கும் பி ஜே மற்றும் அவரது கூட்டம் சகோ.பாக்கர் இவர்களோடு இருக்கும் பொழுது இவரது குறைகளை (இவர்கள் பார்வையில் குற்றம் செய்தவர்( மறைத்து தங்களது இயக்கத்தையும், தங்களையும் வளர்த்துக்கொள்ள சகோ.பாக்கரை காரணியாக பயன்படுத்தியது ஏன்? இவர்கள் கூட சகோ.பாக்கர் இருக்குபோது அவரின் குறைகள் (இவர்கள் பார்வையில் குற்றம் செய்தவர்) இவர்களுக்கு தெரியாதா அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்தார்களா? இவர்களுக்கு தேவைபடும் வரை சகோ.பாக்கரின் குறைகளை (இவர்கள் பார்வையில் குற்றம் செய்தவர்) மறைத்துவிட்டு அடுத்த ஒரு சகோதரர் நோண்டும் பொழுது எங்கோ நமது குற்றுகளும் வெளிப்பட்டு நாரிவிடுவோமோ என்று நினைத்து கொண்டு வேக வேகமாக செயற்குழுவை கூட்டி சகோ.பாக்கரை தூக்கி எரிந்தது ஏன்?



இதே போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் நம் கண் முன்னே நிற்கின்றன. அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். இது போன்ற செயல்பாடுகள்தான் தன்னை தவ்ஹீத்வாதி என்று நிர்மாணிக்கும் என்றால் உண்மையில் இவர்கள் மட்டும்தான் தவ்ஹீத்வாதிகள் எனபது வெட்ட வெளிச்சமாகிறது. இன்னும் இவர்களுக்குள் என்னதான் நடக்கபோகிறது(இறைவன் நாடினால்) என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி என்ற தவ்ஹீதின் உண்மைநிலையை தெளிவுபடுத்துவானாக! இந்த சகோதரர்களுக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்.



-- பொறுமையுடையான் --

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக